தங்கம் கடத்திய எண்மர் இன்று நீதிமன்றில் ஆஜர்.

இலங்கையில் இருந்து நூதனமாக இந்தியாவுக்குத் தங்கம் கடத்தியவர்கள் என இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் மடக்கிப் பிடிக்கப்பட்ட எண்மர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

காங்கேசன்துறை ஊடாக நேற்று நாகைபட்டினம் செல்லத் தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் மேற்கொண்ட ஸ்கானிங் பரிசோதனையில் 6 பேரின் உடம்புக்குள் தங்கத்தைக் கடத்தியமை உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு கடத்தல் உறுதி செய்யப்பட்ட 6 பேரும் தங்கள் உடைமையில் மறைத்து வைத்திருந்த இருவருமாக எண்மர் தற்போது சுங்கத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று மாலை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.