ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் சத்தியாகிரகப் போராட்டம்.
தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையான வேலைத்திட்டமோ அல்லது முறையான தீர்மானங்களோ அரசால் இதுவரை அறிவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகச் சத்தியாகிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்கும் வரை இன்றும் நாளையும் அவர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவே தங்கியிருந்து இந்தப் போராட்டத்தைத் தொடரத் தீர்மானித்துள்ளனர் என்று அகில இலங்கை மீனவர் சங்கத்தின் செயலாளர் ஆர். ஏ. டில்ருக் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதுடன், தமக்கான நிரந்தரத் தீர்வை ஜனாதிபதி பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
