புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்து, நடத்துனரிடம் டிக்கெட் எடுத்து பயணித்த முதல்வர் விஜய்!
புதிய பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், மாநகர அரசு பேருந்தில் பயணம் செய்து வருகிறார்.
300 புதிய பேருந்துகள்
தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் சமீபத்தில் 300 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது.
சென்னை உட்பட 6 கோட்டங்களுக்காக 164 டீசல் பேருந்துகள், 134 சிஎன்ஜி பேருந்துகள் என மொத்தம் 300 பேருந்துகள் கடந்த 22 ஆம் திகதி பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட உள்ளதாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
நிர்வாக காரணங்களால் விழா ரத்தான நிலையில், 3 நாட்கள் பேருந்து சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்தது.
அரசு பேருந்தில் முதல்வர் விஜய் பயணம்
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று புதிய பேருந்துகள் சேவையை முதல்வர் விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதிதாக தொடங்கப்பட்ட திருவல்லிக்கேணியில் இருந்து பெரம்பூர் செல்லும் 29A என்ற மாநகரப் பேருந்தில் முதல்வர் விஜய் பயணித்தார். மேலும், அந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது நடத்துனரிடம் டிக்கெட் வாங்கிய முதல்வர் விஜய், அவரை அருகில் அமர சொல்லி பயணித்தார்.
