முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கினார்!
மொனராகலை மாவட்டம், மெதகமை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய நபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மெதகமை பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் என்று பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 150 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
