அம்பாறையில் யானை தாக்கி விவசாயி ஒருவர் படுகாயம்!
அம்பாறை மாவட்டம், வளத்தாப்பிட்டி – புத்தங்கல எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, அம்பாறை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 42 வயதுடைய சுப்பிரமணியம் கோவிந்தன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு படுகாயமடைந்தவராவார்.
பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் அப்பகுதியில் வேளாண்மைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்ததுடன், காட்டு யானைகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக மரம் ஒன்றில் பரண் அமைத்து யானைக் காவலில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபரீதத்துக்கு முகங்கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
