சி.ஐ.டி.யில் 4 மணி நேரம் சிக்கிய கிழக்கு எஸ்.டி.ஐ.ஜி. – பாதாள உலகக் கும்பலுடனான தொடர்பு பற்றி வாக்குமூலம்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்ததன் பின்னர், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழுவின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் “கெஹெல்பத்தர பத்மே” என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக எழுந்த குற்றச்சாட்டுத் தொடர்பிலான விசாரணைக்காகவே அவர் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவரிடம் முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணையின் போது, தற்போதைய புலனாய்வு நடவடிக்கைகளுக்குத் தேவையான வாக்குமூலத்தை வழங்கிய பின்னரே அவர் விடைபெற்றுச் சென்றுள்ளார் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.