பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘தெம்பிலி லஹிரு’வின் வீடு தீக்கிரை! – அவரின் தாயார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
https://we.tl/t-vBiJZu030uZGbvMa
பாதாள உலகக் குழு உறுப்பினர் எனக் கருதப்படும் ‘தெம்பிலி லஹிரு’ என்பவருக்குச் சொந்தமான மித்தேனிய – ஜுலம்பிட்டிய பகுதியில் உள்ள வீட்டின் மீது நேற்று புதன்கிழமை இரவு இனந்தெரியாத குழுவொன்று தீ வைத்துள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளையில், வீட்டில் லஹிருவின் தாய் மட்டுமே இருந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக, இந்தத் தீ விபத்தில் அவர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினார்.
வீட்டின் ஒரு பகுதி தீயில் சேதமடைந்துள்ளது என்று தெரிவிக்கப்படும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மித்தேனியப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களைக் கண்டறியப் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
