கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த இரண்டாவது யாத்திரிகரும் உயிரிழப்பு!

கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரிகர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென மரணமானார்.

இந்தச் சம்பவம் பாணமையில் இடம்பெற்றுள்ளது.

நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்பவரே இவ்வாறு மரணமான யாத்திரிகர் ஆவார்.

இவரது சடலம் பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலத்தை லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.புனிதராஜன் பார்வையிட்டார்.

இதேவேளை பாதயாத்திரை முதல் யாத்திரிகர் கடந்த 8 ஆம் திகதி பொத்துவில் – குண்டுமடு பகுதியில் உயிரிழந்தார். அவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.