வவுனியா ஏ – 9 வீதியில் விபத்து! பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!!

வவுனியா – ஏ 9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து ஈரப்பெரியகுளம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வவுனியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகாமையில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 46 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் கொஸ்வத்தேகெதர விஜகுலகொட சூரியதாச என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.