வரலாற்றில் முதல்முறையாக ‘தேசிய உற்பத்தித்திறன் விருதுகளுக்கு’ விண்ணப்பித்த வடக்கு ஆளுநர் செயலகம்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம், தனது வரலாற்றில் முதன்முறையாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் நடத்தப்படும் ‘தேசிய உற்பத்தித்திறன் விருதுகளுக்கு’ இம்முறை விண்ணப்பித்துள்ளது.

இந்நிலையில், ஆளுநர் செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று செவ்வாய்க்கிழமை நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

ஆளுநர் செயலகத்தின் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் நேரில் சென்ற ஆளுநர், அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள வினைத்திறனான செயற்பாடுகள், ஆவணப்படுத்தல் நடைமுறைகள் மற்றும் அலுவலகச் சூழல் மேம்பாடு ஆகியவற்றை அவதானித்ததுடன், உத்தியோகத்தர்களுக்குத் தேவையான உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.

ஆளுநரின் இந்த விசேட கண்காணிப்பு பயணத்தின் போது, ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.