45 ஆண்டுகளுக்குப் பின் தொடரும் பாரம்பரியம்: ஐ.நா.விற்கு 5 மயில்களை பரிசளித்த இந்தியா!

ஜெனிவா,

ஐ.நா., சபையின் ஜெனீவா அலுவலகத்திற்கு அரிய வகை வெள்ளை மயில் உட்பட ஐந்து மயில் களை, இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா., தலைமையக வளாகத்தில், வரலாற்றுப் புகழ்பெற்ற ‘அரியானா பூங்கா’ அமைந்துள்ளது. இந்தப் பூங்காவின் சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் விதமாக, பல ஆண்டுகளுக்கு முன், மயில் வளர்க்கப்படும் பாரம்பரியம் இருந்தது.

கடந்த 1981ல், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, டெல்லி உயிரியல் பூங்காவில் இருந்து, இரண்டு மயில்களை வழங்கி இருந்தார். இந்த நிலையில், 45 ஆண்டுகளுக்கு பின் தற்போது நம் நாட்டின் சார்பில் அரிய வகை வெள்ளை ஆண் மயில் உட்பட ஐந்து மயில்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.