தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து – அரசாணை வெளியீடு

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் வெளியிட்ட அரசாணை:

தமிழ்த்தாய் வாழ்த்து தொடா்பாக முதல்வரால் சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட தனித்தீா்மானம் நிறைவேற்றப்பட்டதை ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் , அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக, தமிழ்மொழிக்கும், தமிழா் பண்பாட்டுக்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.