“என்னை கொன்றுவிடுவார்கள்…” – மருத்துவமனையில் கதறிய நிறைமாத கர்ப்பிணி, குழந்தை பிறந்த பின் பரிதாப பலி!
என்னை கொன்றுவிடுவார்கள் என கதறிய நிறைமாத கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்தபின்னர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஹட்வா பகுதியை சேர்ந்தவர் கல்பனா(வயது 25), நிறைமாத கர்ப்பிணியான கல்பனா சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 25ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
குழந்தையை பிரசுவித்த பின்னர் கல்பனாவும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோவில், நான் பிழைக்கமாட்டேன், என்னை காப்பாற்றுங்கள், உயிருக்கு ஆபத்து என அவர் கூறுவதும், மிகுந்த மன உளைச்சலுடன் இருப்பதும் அவரை ஊழியர்கள் சமாதானம் செய்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து தன்னுடைய உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பதும், அழுதுகொண்டே தனக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குடும்பத்தினரிடம் கூறுவதும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கல்பனாவின் தந்தை, எனது ஒரே மகள் கல்பனா, அவள் இப்போது இல்லை, இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை FIR பதிவு செய்ய வேண்டும், மருத்துவர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மருத்துவ நெறிமுறைகளின் படியே கல்பனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், எந்தவித அலட்சியமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
