பூட்டானைச் சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய!

உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பூட்டானைச் சென்றடைந்துள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று மாலை பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பூட்டானைச் சென்றடைந்த இலங்கைப் பிரதமரைப் பூட்டான் பிரதமர் டஷோ ஷெரிங் டோப்கே மற்றும் அந்நாட்டு அரசின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றுள்ளனர்.

பூட்டானில் ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை நடைபெறும் முதலாவது ‘உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்’ உச்சிமாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அரச பிரதிநிதிகள் மற்றும் உணவு முறைமை தொடர்பான நிபுணர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.