முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!

மூத்த தமிழ்த் தேசியவாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குச் சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சத்திர சிகிச்சையின் பின்னர் கொழும்பில் தங்கியிருந்து தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வாரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்றுப் புதன்கிழமை அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.