நள்ளிரவில் அத்துமீறல்… கஞ்சா சிறுவனை விரட்டி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றிய தெருநாய்!
street dog நள்ளிரவில் மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீறிய சிறுவனை தெருநாய் ஒன்று விரட்டி பெண்ணை காப்பற்றியுள்ளது.
மனநலம் பாதித்த பெண்ணை காப்பாற்றிய தெருநாய்
கோவையில் என்.ஜி.ஓ. காலனி அசோகபுரம் பகுதியில் ஒரு பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக துடியலூர் காவல்துடையினருக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்த விசாரணைக்காக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் பெண்ணிடம் அத்துமீறிய சிறுவனை நாய் துரத்தி, பெண்ணை கைப்பற்றியது தெரியவந்துள்ளது.
அந்த சிசிடிவி காட்சியில் அசோகபுரம் ரெயில்வே மேம்பால சாலையோரத்தில், நள்ளிரவு 2 மணியளவில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் படுத்திருந்தது தெரியவந்தது.
அப்போது கஞ்சா மதுபோதையில் அந்த வழியாக வந்த நபரை தெருநாய் ஒன்று குறைத்து கொண்டே பின்தொடர்ந்து வந்துள்ளது.
அந்த நபர் அங்கு படுத்திருந்த பெண்ணிடம் இது உங்கள் நாயா? பின்னாடியே வருகிறது என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், கல்லை எடுத்து எறியுங்கள் போய்விடும் என தெரிவித்துள்ளார்.
அந்த நபர் சாலையோரம் இருந்த கல்லை எடுத்ததும், அந்த நாய் சற்று தூரம் பின்னால் சென்றுள்ளது.
உடனே அந்த பெண் நபர், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அந்த பெண் கூச்சலிட்ட நிலையில், அந்த தெரு நாய் அந்த நபரை பார்த்து குறைக்க தொடங்கியுள்ளது.
நாய் விடாமல் குறைத்துக்கொண்டே அவரை கடிக்க பாய்ந்த போது, அந்த நபர் அந்த பெண்ணை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். ஆனால் நாய் அவரை விடாமல் துரத்தி சென்றுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பெண்ணிடம் அத்துமீறிய நபர் அதே துடியலூர் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் என தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.
