கடலில் படகு கவிழ்ந்ததில் இருவர் பரிதாப உயிரிழப்பு! மட்டக்களப்பு – காத்தான்குடியில் சோகம்.

மட்டக்களப்பு, காத்தான்குடி – கிரான்குளம் பகுதியில் கடலில் படகு ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

காத்தான்குடி – கிரான்குளம் கடல் பகுதியில் நேற்றுப் பிற்பகல் படகொன்று கவிழ்ந்த விபத்தில், உடனடியாகச் செயற்பட்ட அருகில் இருந்தவர்கள் ஒருவரைப் பத்திரமாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கிக் காணாமல்போன மற்றொருவரைக் கண்டெடுக்கும் பணியில் உயிர்காப்புப் பிரிவினரும் மீட்புக் குழுவினரும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.