பட்டிமன்றத்தின் புகழ்பெற்ற குரல் சாலமன் பாப்பையா காலமானார்!

பட்டிமன்றங்களின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களைக் கவர்ந்த புகழ்பெற்ற தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (90), வயது முதிர்வு காரணமாக நேற்று (11.09.2026) மதுரையில் காலமானார்.

சாலமன் பாப்பையா
மதுரையைச் சேர்ந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியதுடன், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாசிரியர், நடிகர் எனப் பன்முகத் திறமையுடன் விளங்கினார்.

கம்பீரமான குரல், நகைச்சுவை கலந்த பேச்சு மற்றும் எளிமையான இனிய தமிழ் மூலம் உலகத் தமிழர்களின் அன்பைப் பெற்ற இவர், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பட்டிமன்றங்களை நடத்தி தமிழ் மொழியின் சிறப்பையும் நகைச்சுவையையும் உலகெங்கும் கொண்டு சேர்த்தார்.

Leave A Reply

Your email address will not be published.