பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை

புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டு விருந்​தினர்​களுக்கு பிஹாரின் பிரபல​மான உணவு வகைகளான சாத்து, மகானா ஆகியவை வழங்​கப்பட உள்​ளன.

டெல்​லி​யில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று முதல் (செப்​டம்​பர் 12) 2 நாட்​களுக்கு நடை​பெறவுள்​ளது. இம்​நாட்​டில் பங்​கேற்​கப் போகும் விருந்​தினர், பத்​திரி​கை​யாளர்​களுக்கு பிஹார் மாநில பிரபல உணவு வகைகளான சாத்து, மகானா லட்டு ஆகியவை வழங்கப்பட உள்​ளன.

இதுகுறித்து பிரிக்ஸ் மாநாட்டு அமைப்பு அதி​காரி ஒரு​வர் கூறியதாவது: விருந்​தினர்​களுக்கு வழங்​கப்​படும் வெல்​கம் கிட்டில் தண்​ணீர் பாட்​டில், காபி கோப்​பை, பிரிக்ஸ் மாநாட்டு டைரி, பேனா, விழா மலர், சாத்​து, மகானா லட்டு தின்​பண்​டங்​கள் ஆகியவை இடம்​பெறும்.

மேலும் ஒடி​சா​வின் கோராபுட் காபி பொடி, குஜ​ராத்​தின் கைவினைப் பொருட்​களும் அந்த வெல்​கம் கிட் அடங்​கிய பையில் இடம்​பெறும். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

இந்​நிலை​யில் பிரிக்ஸ் மாநாட்டு விருந்​தினர்​களுக்கு பிஹாரின் தின்​பண்​டங்​கள் வழங்​கப்​படு​வதற்​காக பிரதமர் மோடிக்​கு, பிஹார் மாநில முதல்​வர் சாம்​ராட் சவுத்ரி நன்றி தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலத்​தின் மகானா வகை உணவு, 2022-ல் புவி​சார் குறி​யீடு பெற்​றது. மேலும் சாத்து வகை உணவு, வறுத்த கடலை மாவிலிருந்து தயாரிக்​கப்​படு​கிறது. குறைந்த விலை என்ற போ​தி​லும் மிக​வும் சத்து வாய்ந்​தது சாத்​து என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Leave A Reply

Your email address will not be published.