22 ஆவது திருத்தச் சட்டமூலம்: வெள்ளி மாலை வாக்கெடுப்பு!
அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்தச் சட்டமூலம் இலங்கையின் அரசமைப்புடன் முரண்படவில்லை என்பதால் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்றும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையுடன் இதனை நிறைவேற்றலாம் என்றும் தீர்ப்பளித்திருந்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நேற்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சட்டமூலம் குறித்த விவாதத்தை நடத்துவற்காக எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய, இரண்டு நாள் விவாதத்தின் நிறைவில் வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
