திலீபன் நினைவேந்தல் ஒலிபெருக்கிகள் பறிப்பு: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு!

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஒலிபெருக்கிப் பாவிப்பதற்கு அனுமதி வழங்கப்படாமை மற்றும் பொலிஸாரால் ஒலிபெருக்கிகள் கைப்பற்றப்பட்டமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். நல்லூரில் திலீபனின் நினைவிடத்தில் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு சென்ற பொலிஸார் ஒலிபெருக்கிப் பாவிக்க அனுமதி இல்லை எனக் கூறி அங்கிருந்த ஒலிபெருக்கிகளை எடுத்துச் சென்றனர்.

கைப்பற்றப்பட்ட ஒலிபெருக்கிகளை மீள வழங்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்தபோதும், அதனை வழங்கப் பொலிஸார் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினருமான பொன். மாஸ்டர், யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.