அனோஜனை உடனடியாக மன்னித்து விடுவியுங்கள்! – ஜீவன் எம்.பி. கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரணதண்டனைத் தீர்ப்புக்ககாக எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு ஒரு நாடாக நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“சிவராசா அனோஜன் விவகாரமானது வெளிவிவகார அமைச்சுடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒரு விடயமாகும் என்பதால், இதற்கு அரசே முன்னுரிமை வழங்கி மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும்.

இந்தப் பிரச்சினையை அரசியல் மயமாக்குவதாலோ அல்லது வெளிவிவகார அமைச்சுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துவதாலோ எத்தகைய பலனும் கிடைக்கப் போவதில்லை.

அனோஜனைச் சட்ட ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் மீட்டுக்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் எமது முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.