என்.பி.பியின் முழு ஒற்றுமை இன்று வெளிப்படுத்தப்படும்! – எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரங்களை முறியடிப்போம் என்றும் பிரதமர் ஹரிணி சூளுரை.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் இன்றைய தினம், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுவின் முழுமையான ஒற்றுமை தெளிவாக வெளிப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தேசிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் இருக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய பிரதமர்,

“எமக்கு எந்தவிதமான தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களும் கிடையாது. நாட்டுக்கான பொதுவான ஒரு இலக்கே உள்ளது.

நாளை (இன்று) நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் 158 உறுப்பினர்களின் உறுதியான ஒற்றுமையை நாடே காணும்.” – என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நீதிபதிகளின் பதவிக் காலத்தை இரண்டாண்டுகளுக்கு நீடிக்கும் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் இறுதி நாளான இன்று இரவு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.