சவுதி கார் விபத்து: தஞ்சை, கேரளா செவிலியர்கள் 4 பேர் பலி!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்
கேரளாவின் கோட்டயம் மாவட்டம் அயர்குன்னம் பகுதியை சேர்ந்த 46 வயது ஜெய்சிமோல் மேத்யூ மற்றும் குருமநல்லூரை சேர்ந்த ஜோபினா ஜோனி ஆகியோர் சவுதி அரேபியா நாட்டில் செவிலியர்களாக பணியாற்றி வந்தனர்.

இவர்களுடன் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 33 வயது ஹெப்சிபா தேவமணி மற்றும் அண்ணா சத்யா நகரை சேர்ந்த 37 வயது விஜயலெட்சுமி ஜெகதீஷ் ஆகியோரும் செவிலியர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நான்கு பேருக்கும் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) விடுமுறை என்பதால் ஒரே காரில் அருகிலுள்ள நகருக்கு ஷாப்பிங்கிற்காக சென்றுள்ளனர்.

ஷாப்பிங்கை முடித்து விட்டு அடுத்த நாள் அதிகாலையில் 4 பேரும் காரில் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 4 செவிலியர்களும், காரை ஓட்டி வந்த சவுதி அரேபியாவை சேர்ந்த ஓட்டுநர் என 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.