கொச்சியில் ஏ.ஐ. ரோபோக்கள் அறிமுகம்: போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கேரளம் அரசின் புதிய முயற்சி!

கொச்சி,

கேரளம் மாநிலத்தில் பெருகிவரும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ஏ.ஐ. தொழில் நுட்ப மனித ரோபோக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

ரோபோக்கள்
நாகரிக உலகில் நவீனம் பல வகையில் வளர்ச்சி பெற்று வருகிறது. அதில் தற்போது உருவாக்கப்படும் மனித ரோபோக்களின் பங்கு அதிகம். மருத்துவத்துறை, வேளாண்மை. தொழிற்சாலை பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் ரோபோக்கள் உருவாகி வருகின்றன.

இந்தநிலையில் போலீசாருடன் இணைந்து போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பது. பாதசாரிகளுக்கு வழிகாட்டுவது மற்றும் நெரிசலான நேரங்களில் போக்குவரத்தை சரி செய் வது போன்ற பணிகளில் ரோபோக்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மனிதர்களை போலவே சிந்தித்து, செயல்படும் வகையில் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்படும்.

காவல்துறை
ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்ட இந்த மனித ரோபோக்களை கேரளம் மாநில அரசு கொச்சி நகரில் முதல்முறையாக களமிறக்க முடிவு செய்துள்ளது. காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்து, பாதுகாப்பு பணியை வலுப்படுத்தும் நோக்கில் கேரளம் அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது.

கொச்சியில் நடந்த சைபர் பாதுகாப்பு மாநாட்டின் போது, இதற்கான அதி காரப்பூர்வ அறிவிப்பை கேரளம் மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகெங்கும் நவீன தொழில்நுட்பம் பெருமளவு வளர்ச்சி பெற்று வரு கிறது. அப்போது அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்ற செயல் களை புரிவதும், அதன் பின் எளிதாக குற்றவாளிகள் அதிலிருந்து தப்புவ தும் அதிகரித்து வருகிறது. இது பாதுகாப்பு பணிகளுக்கு சவால்களை ஏற்படுத்துகிறது. இதை திறம்பட சமாளிக்க கேரளம் மாநில அரசு காவல் துறை சார்பில் ரோபோட்டிக் பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்ள உள் ளது.

இந்திய ராணுவத்தில் முக்கியமான சேவைகளில் ரோபோக்கள் மூலம் உள்நாட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாநிலங்களில் தனிநபர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

போக்குவரத்து பணி
இதற்காக கேரள அரசு, ஐ-ஹாப் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து போக்குவரத்து நிர்வாகம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர் பான மீட்பு நடவடிக்கை ஆகியவற்றில் ஈடுபட ஏதுவாக ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. போக்குவரத்து பணிகளில் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்து உடல் குறைபாடு ஏற்படுகின்றன.

இவற்றிலிருந்து மனித திறனை விடுவித்து புதிய ரோபாட்டிக் பயன்பாடு மூலம் போக்குவரத்து நெருக்கடியை திறம்பட கட்டுப்படுத்த ‘தாக்ஷா’ என்ற ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படும். இந்த ரோபோட்டுகள் போக்குவரத்து பணிகளை நிர்வகிக்கும். அதேபோன்று இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது ‘தாரா’ என்ற புதிய வகை ரோபோக்கள் உருவாக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.