மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி: தவெக எம்எல்ஏக்களாக மரகதம் குமரவேல், சத்யபாமா பதவியேற்பு!

மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் முறையே மதுராந்தகம், தாராபுரம் தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் அவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் அறையில், அவரது முன்னிலையில், எம்எல்ஏக்களாக வெற்றி பெற்ற சான்றிதழை அளித்து, மரகதம் குமரவேலும் சத்யபாமாவும் தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு ஜேசிடி பிரபாகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பிறகு எம்எல்ஏக்களாக பதவியற்றுக் கொண்டு இருவரும் கையெழுத்திட்டனர்.

தமிழகத்தில் இடைத்தோ்தல் நடைபெற்ற மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) பேரவைத் தொகுதிகளில் ஆளும் கட்சியான தவெக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். அதிமுக வசமிருந்த இவ்விரு தொகுதிகளையும் எம்எல்ஏக்களுடன் சேர்துது தற்போது தவெக கைப்பற்றியது. இதன் மூலம் தமிழக பேரவையில் தவெக எம்எல்ஏ-க்களின் பலம் 109-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றிய தவெக, திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது.

அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களில் 6 போ் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனா். இதைத்தொடா்ந்து காலியான அத்தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. அக்.6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அக்.9ல் எண்ணப்பட்டன.

தாராபுரம் தொகுதியில் தவெக சாா்பில் பொ.சத்தியபாமா, திமுக சாா்பில் சௌ.சுகன்யா, அதிமுக சாா்பில் க.பானுமதி, நாதக சாா்பில் மு.காா்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பா.லட்சுமணன் உள்ளிட்ட 22 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இங்கு 80.25 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் உள்ள 2,23,306 வாக்காளா்களில் 1,79,214 போ் வாக்குகளைச் செலுத்தினா். தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் பரந்தாமன் 54,008 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் கணிதா சம்பத் 47,450 வாக்குகளும் பெற்றனா். தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்த மரகதம் குமரவேல் 27 சுற்றுகளின் முடிவில் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் பரந்தாமனைத் தோற்கடித்தாா்.

Leave A Reply

Your email address will not be published.