அக்குரணையை உலுக்கிய கோர விபத்தில் அறுவர் பலி! – பலர் படுகாயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில்…

கண்டி – மாத்தளை பிரதான வீதியின் அக்குரணை 7ஆம் கட்டைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளமையுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

சீமெந்து மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, திடீரெனச் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த நான்கு ஓட்டோக்கள், இரண்டு லொறிகள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதித் தள்ளியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பலரும் உடனடியாக மீட்கப்பட்டு அக்குரணை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கோர விபத்தின் காரணமாகக் கண்டி – மாத்தளை பிரதான வீதியின் அக்குரணைப் பகுதியில் நீண்ட நேரமாகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.