பெங்களூரு புறநகர் பகுதியில் நிலநடுக்கம்: அலறியடித்து வீட்டைவிட்டு வெளியேறிய பொதுமக்கள்!
பெங்களூரு: பெங்களூரு புறநகர் பகுதியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்து, வீடு…
பெங்களூரு: பெங்களூரு புறநகர் பகுதியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்து, வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதற்கான சிறந்த தலைப்புகள்
பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள திம்மோஜனஹள்ளியில் நேற்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்தன.
அச்சத்தின் காரணமாக மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். பொதுவெளியிலும் மைதானத்திலும் ஆயிரக்கணக்கானோர் தஞ்சமடைந்தனர். இதேபோல நரகனஹள்ளி, கர்னலா, துபெகெரே உள்ளிட்ட கிராமங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். லேசான நிலநடுக்கம் என்பதால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
