கணவனை இழந்து பிள்ளைகளுடன் வாழ்ந்த 41 வயதுப் பெண் கொடூரமாகப் படுகொலை!

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொடூர சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, உயிரிழந்த பெண்ணின் கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார் என்ற சோகமான தகவல் தெரியவந்துள்ளது.

மேற்படி பெண் தனது பிள்ளைகளுடன் வீட்டில் இருந்த வேளையில் அத்துமீறி வந்த இனந்தெரியாத நபர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலையாளி யார் மற்றும் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.