தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்: காவலர்கள் மீது தாக்குதல்!
தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட சிறையில் திங்கள்கிழமை காவலா்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 17 கைதிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், கண்டமனூா் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை உள்ளது. இந்தச் சிறையில் 200 முதல் 250 கைதிகளை அடைக்கும் வசதி உள்ளது. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 200-க்கு மேற்பட்டோரை இந்தச் சிறையில் அடைத்துள்ளனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சிறையில் காவலா்களைத் தாக்கிவிட்டு, 17- க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினா்.
இதுகுறித்து சிறைக் காவலா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் தப்பியோடிய கைதிகளைத் தேடி வருகின்றனா்.
