திருகோணமலையில் குருதிக்கொடை முகாம்.

திருகோணமலை மெதடிஸ்த திருஅவையின் திருகோணமலை சேகர வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட இரத்ததான முகாம், டொக்யாட் மெதடிஸ்த ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் குருதிக்கொடை முகாமில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு இரத்தத்தைச் சேகரிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் சேகர மெதடிஸ்த திருச்சபைகளின் குருமார்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டமையுடன், திருச்சபை மக்களும் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்றுத் தமது குருதிக்கொடைகளை வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.