ஹைதராபாத்தில் புதிய முயற்சி: பூங்காக்களிலேயே அமர்ந்து பணிபுரிய ‘வொர்க் பிரம் பார்க்’ திட்டம்!

நகரி,

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள சைபரா பாத் பகுதியில் ஐ.டி. ஊழியர்கள் பூங்காக்களில் அமர்ந்து வேலை செய்யும் வகையில் ‘வொர்க் பிரம் பார்க்’ என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக 30 பூங்காக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக மாதாபூர், சேரிலிங்கம் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இதற்கான இடம் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அவை வருகிற ஜனவரி 1-ந்தேதிக்குள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஒட்டுமொத்தமாக 300 பூங்காக்கள் இப்பணிக்காக தயார்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக சைபராபாத் மாநகராட்சி ஆணையர் சுருஜனா தெரிவித்தார்.

ஐ.டி. ஊழியர்களின் பணிக்காக இந்த பூங்காக்களில் அதிவேக வைபை, சார்ஜிங் வசதி, இருக்கைள், மேஜைகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சிற்றுண்டி மையங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஐ.டி. ஊழியர்கள் மட்டுமின்றி, ஸ்டார்ட்-அப் குழுக்கள், மாணவர்கள் போன்றவர்களும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என சுருஜனா மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.