தமிழ்நாடு அரசு அறிவிப்பு: பெண்களுக்கான 8 கிராம் தங்கம் வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டம் – முழுமையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை!

திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க வழங்கும் அண்ணன் சீர்திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள், எப்போது, எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்ப செயல்முறை, மேல்முறையீடு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தகுதிகள்
திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.

பொது விநியோக திட்டத்தின் (PDS) கீழ் வழங்கப்பட்ட செயல்பாட்டில் உள்ள குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

மணப்பெண்னின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.

சொந்த பயன்பாட்டிற்கு 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், வீட்டு வருடாந்திர மின் நுகர்வு 3.600 யூனிட்டிற்கும் மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், பயன் பெற இயலாது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தவிர்த்தும் அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்/ ஓய்வூதியதாரர்கள் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துபவர்கள் நிறுவனத்தினர் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.

எப்படி எப்போது விண்ணப்பிப்பது?
திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

05.10.2026 முதல் 15.01.2027 திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம்.

அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப செயல்முறை
விண்ணப்பதாரர் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் சமர்பித்தவுடன் மென்பொருள் அமைப்பின் மூலம் தானியங்கி முறையில் திட்டத்தினை பயன் பெற விண்ணப்பதாரரின் தகுதி சரிபார்க்கப்படும்.

விண்ணப்பதாரர் தகுதியுடையவராக இருப்பின் அவர் திருமணப் பத்திரிகையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் உருவாக்கப்படும்.

தனித்துவ அடையாள எண்ணுடன் தகுதிப்பெற்ற விண்ணப்பங்கள் குறித்த செய்தி பயனாளிகளுக்கு, அவர்களால் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி, WhatsApp மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தெரிவிக்கப்படும்.

மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதார்கள் திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள், தமிழ்நாட்டில் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.

மேல் முறையீடு
ஏதேனும் தகுதியில்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணம் விண்ணப்பங்கள் உடனடியாக விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும்.

தன் விண்ணப்பம் தவறாக நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கருதினால், இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் வசதி மூலம் மேல்முறையீடு செய்யலாம்.

மேல்முறையீடு செய்யும் விண்ணப்பங்கள் குறித்து கள விசாரணை செய்யப்பட்டு, விண்ணப்பதாரர் தகுதியானவராக இருப்பின் மேற்கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பலன்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

தகுதி இல்லாத காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்குரிய காரணம் தெரிவிக்கப்படும், விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.