ரஷ்யாவிலிருந்து வந்த ‘ரொட்டும்ப அமில’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தீவிர விசாரணை.

ரஷ்யாவில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘ரொட்டும்ப அமில’ எனும் அமில சம்பத் சேபால ரத்நாயக்க, மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று ரஷ்யாவில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட மேற்படி சந்தேகநபர், விமான நிலையத்தில் வைத்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மேற்படி சந்தேகநபர் பிரபல வர்த்தகர் ‘கிளப் வசந்த’ கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளவர் என்பதுடன், மேலும் பல மனிதப் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.