ஓமந்தையில் காணாமல்போயிருந்த நபர் நான்கு நாள்களின் பின்னர் சடலமாக மீட்பு!

வவுனியா, ஓமந்தை, கொந்தக்காரன்குளம் பகுதியில் காட்டுக்குச் சென்று காணாமல்போயிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, ஓமந்தை, கொந்தக்காரன்குளத்தைச் சேர்ந்த து. நாகராசா (வயது 60) என்பவர் கடந்த புதன்கிழமை காலை காட்டுக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என்று உறவினர்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையுடன், அவரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், காணாமல்போயிருந்த மேற்படி நபர் அந்தப் பகுதியிலிருந்து இன்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஓமந்தை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.