அடைமழையை அடுத்து வவுனியாவில் : அகற்றப்படும் பழமை வாய்ந்த மரங்கள்

அடைமழையை அடுத்து வவுனியாவில்
அகற்றப்படும் பழமை வாய்ந்த மரங்கள்

ஏ – 9 வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டது

தொடரும் மழையுடனான காலநிலையை அடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகக் காணப்பட்ட பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதால் ஏ – 9 வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டது.

வங்களா விரிகுடாவில் உருவாகிய புரேவி புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் காற்றுடன் கூடிய மழை நீடித்த வண்ணமுள்ளது. இதன் காரணமாக வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவுள்ள பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தொலைத்தொடர்பு நிலையத்தின் (எஸ்.எல்.ரி.) பாரவூர்தி வாகனத்தின் உதவியுடன் மரங்களை அகற்றும் நடவடிக்கை இடம்பெற்றது.

இதன் காரணமாக ஏ – 9 வீதியில் வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்தியிலிருந்து வவுனியா நீதிமன்ற வளாகம் வரையிலான பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.