கூட்டமைப்பு 20 ஆசனங்களை பெறும் – சம்பந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது , எதிர்வரும் பொதுத் தேர்தலில் 20 ஆசனங்களை தமது கட்சி பெறுவது உறுதி எனத் தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களிலும் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும் என்றார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம். இம்முறை எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அவர்களோடு இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் எனத் தெரிவித்த அவர் சரியானதொரு அரசியல் தீர்வை பெற வேண்டி தமிழ் பேசும் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

Comments are closed.