குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவமானப்படுத்த புதிய திட்டம்!

சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் துஸ்பிரயோகம், கொள்ளை மற்றும் தாக்குதல் போன்ற குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் போது அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு மேலதிகமாக புகைப்படம் எடுத்து தனிப்பட்ட தகவல்களுடன் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு வௌிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் அச்சத்தில், வெட்கத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க வாய்ப்பு உள்ளதென எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

118 அவசர இலக்கத்திற்கு பொது மக்கள் அழைப்பெடுத்து குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து குற்றச் செயல்களை தடுக்கவும் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்கவும் பொலிஸார் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.