விரைவில் ‘மெகா’ கூட்டணி; ஐ.தே.கவும் இணையலாம்! மனோ அதிரடி அறிவிப்பு.

விரைவில் ‘மெகா’ கூட்டணி;
ஐ.தே.கவும் இணையலாம்!
மனோ அதிரடி அறிவிப்பு 

“ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பாரிய அரசியல் கூட்டணி உருவாக்கப்படும். அதில் வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சி இணையலாம்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு:-

“ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) கூட்டணியாக முதலில் உருவாக்கப்பட்டது. தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் வசமாகும் என்ற எதிர்பார்ப்பை, ரணில் மீண்டும் தவிடுபொடி ஆக்கியதால், ஐ.தே.கவை மீண்டும் மறுசீரமைக்கும் எண்ணம் இப்போது கைவிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தனிக்கட்சியாக வளர்தெடுக்கப்படும். அதையடுத்து ஐக்கிய மக்கள் கூட்டணி உருவாக்கப்படும். அதில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி உட்பட பங்காளிக் கட்சிகள் இணைந்து பாரிய எதிரணி கூட்டணியாக அது உருவாக்கப்படும். இதில் ஒரு பங்காளியாக ஐக்கிய தேசியக் கட்சி விரும்பினால் இணையலாம்.

இந்தப் பொது நோக்கில் இன்று சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, குமார வெல்கம போன்றோர் ஐக்கிய மக்கள் சக்தியில் நேரடியாக இணைந்து, எமது கூட்டணியின் பிரதான கட்சியான அதைப் பலப்படுத்துகின்றார்கள். பாரிய எதிரணி கூட்டணியை உருவாக்கும் இந்த நடவடிக்கைகளை நாம் ஆதரிப்போம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.