முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது!

முல்லைத்தீவு மாவட்ட நடப்பாண்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் ஏற்பாட்டில் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான காதர் மஸ்தான் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று(19) சனிக்கிழமை மு.ப9.30மணிக்க மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோரின் பங்குபற்றலுடன் வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,
பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் தவிசாளர்கள், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கொண்டனர்.

அபிவிருத்தி குழுத் தலைவர் காதர் மஸ்தான் தெரிவிக்கையில் : அதிமேதகு ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக பின் தங்கிய கிராமங்கள் இனங்காணப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும். மேலும் நாட்டில் உள்ள வறுமையினை ஒழிக்கும் முகமாக பல்துறை சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக இக் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. கிராம மட்டத்தில் இருந்து வறுமை நிலையினை ஒழிப்பதற்கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

மேலும் இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிக்கையில் : அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கு இன, மத, மொழி வேறுபாடின்றி அபிவிருத்திக்காக ஒன்றினைய வேண்டும். அபிவிருத்தி என்பது நகர புறத்தை மட்டும் உள்ளடக்கியிருக்காது கிராமப் புறங்களையும் சென்றடைய வேண்டும். அதற்காக ஒவ்வொரு திட்டங்களும் நன்கு ஆய்வு செய்யப்பட்டு பயன்படத்தக்கதான வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். கிராமப்புற பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றுக்கு குடிநீர், மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படை விடயங்களிற்கு முன்னுரிமை வழங்குவதாக அடுத்தாண்டு திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் வீதி, போக்குவரத்து, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம், கல்வி, சிவில் நிர்வாகம், வீட்டுத்திட்டம், காணி, பொது உட்கட்டமைப்பு வசதிகள், நீர்ப்பாசணம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.