மோட்டார் சைக்கிள் கோரவிபத்தில் தந்தையும் மகனும் பலி.

பிலியந்தலையில் தனது நான்கு வயது மகனையும் மனைவியையும் ஏற்றிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிரிஹான சாலாவ வீதியைச் சேர்ந்த பிரதீப் உதய குமார (32) மற்றும் அவரது மகன் சதெவ் அபிராஸ் (வயது 4) ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துளளனர்.

ஹொரணை கொழும்பு வீதியின் ஜாலியகொட பிரதேசத்தில் இரண்டு மருங்குகளைப் பிரிப்பதற்காக வீதியின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பாரிய பூச்சாடியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் இரண்டு துண்டுகளாக உடைந்துள்ள நிலையில், விபத்தில் காயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.