கொரோனாவின் 2வது அலையால் மிலியன் கணக்கான மக்கள் சாகலாம் : உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் அது குறித்து எச்சரிக்கையோடு செயல்படாவிடின் கொல்லப்படலாம்.

சீனா, தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வைரஸ் மீண்டும் வந்துள்ளது. இந்த நிலை வைரஸின் முதல் கட்டத்தை விட மோசமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

உலகளவில், கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 மில்லியனை எட்டியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வைரஸ் இன்னும் பரவி வருகிறது. இதுபோன்ற பின்னணியில் தான் WHO அதிகாரிகள் இரண்டாவது அலை பற்றி எச்சரிக்கின்றனர்.

Comments are closed.