சிறுவர் நிதிய நிறுவனமானது தங்களது செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

சமூக மட்ட புனர்வாழ்வின் மூலம் இயலாமைக்குட்பட்ட சிறுவர்களை உள்வாங்குதல் எனும் செயற்றிட்டத்தினை கடந்த 2015 ம் வருடம் முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திய சிறுவர் நிதியம் நிறுவனமானது தங்களது செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்தமையை முன்னிட்டு இன்றைய தினம் நிகழ்வொன்று முல்லைத்தீவு அவெலோன் ஹோட்டலில் சுகாதார விதிமுறைகளுக்கமைவாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், சுகாதார சேவைகள் பணிமணையின் திட்டமிடல் வைத்திய உத்தியோகத்தர், மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், முல்லைத்தீவு மற்றும் துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளர்கள், விசேட கல்விக்கான வட மாகாண உதவிப்பணிப்பாளர், மாவட்ட மற்றும் பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான இணைப்பாளர், விசேட கல்விக்கான ஆசிரிய ஆலோசகர், அதிபர்கள், இயலாமைக்குட்பட்ட நபர்களது நிறுவனங்களது பிரதிநிதிகள், மாணவர்கள்  மற்றும் சிறுவர் நிதியத்தின் உத்தியோகத்தர்கள் பங்குபற்றி சிறப்பித்தனர்.
இத்திட்டத்தில் இயலாமைக்குட்பட்ட சிறுவர்களது மருத்துவம், கல்வி மற்றும் வாழ்வாதாரம் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அரச அதிகாரிகாரிகளின் பூரண ஒத்துழைப்பும் கிடைகப்பட்டதனை பாராட்டும் முகமாக அரச அதிகாரிகளுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அடிப்படைப் புனர்வாழ்வு தொடர்பான கைந்நூல் மற்றும் இறுவெட்டு, உள்வாங்கள் கல்வி தொடர்பான ஆசிரியர்களுக்கான கைந்நூல் மற்றும் இயலாமைக்குட்பட்ட நபர்களது நிறுவனங்களுக்கான நிதி வழிகாட்டல்கள் உள்ளடங்கிய கைநூல் போன்றவை வெளியிடப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.