மாணவர்களின் பெற்றோருக்கு சுகாதார அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மூடப்படிருந்த பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களது பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய நடைமுறைகள் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டள்ளது.

இதன்படி சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று சுகாதார பிரிவினர் பெற்றோரை அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன மாணவர்களக்கு முககவசம் அணிவதற்கு தேவையான நடவடிக்கைகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதேபோன்று பாடசாலைகளில் மாணவர்கள் கைகளை கழுவுதற்கு வசதிகளை செய்தல், இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றில் அடிக்கடி கவனம் செலுத்துதல் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

Comments are closed.