விக்னேஸ்வரன் – கூட்டமைப்பு மோதலால் சீரழிந்தது வடக்கு மாகாண சபை

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற மோதலால் வட மாகாண சபை சீரழிந்து போயுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனாலேயே வட மாகாண சபையுடான எந்தவொரு அபிவிருத்தியும் மக்களை சென்றடையவில்லையென வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாண சபை ஊடாக சிறந்த நலன்கள் மக்களை சென்றடையும் என நாம் கருதிய போதிலும் அது முறையாக நடைபெறவில்லை. 2013 ஆம் ஆண்டு புதிய முதலமைச்சராக விக்னேஸ்வரன் அவர்கள் பதவியேற்ற போது தான் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராக செயற்பட்டதாக கருத்து தெரிவித்த வெளிவிகார அமைச்சர், வட மாகாணத்திற்கென நீர் வழங்கல் திட்டங்கள் குறித்த யோசனையை தனது அமைச்சுனூடாக முன்வைத்த போதிலும் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லையென கவலை தெரிவித்துள்ளார்.

இப்படியான பல அபிவிருத்தி திட்டங்கள் தடைப்பட்டதற்கான பிரதான காரணம் விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான ஒற்றுமையின்மையே எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்த நிலை நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்ந்துள்ளதாகவும் வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Comments are closed.