ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராக சட்டத்தரணி மிஸ்பா சத்தார் நியமனம்

ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய பொருளாளராக சட்டத்தரணி மிஸ்பா சத்தார் கட்சித்தலைவரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாளர் நியமனத்திற்கான கடிதத்தை சட்டத்தரணி மிஸ்பா சத்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் வைத்து கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

ஏற்கனவே இந்த பதவியில் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா, கடந்த மார்ச் மாதம் அப்பதவியிலிருந்து விலகிக்கொண்டதனை அடுத்தே இந்த இடத்திற்கு சட்டத்தரணி மிஸ்பா சத்தார் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.