டிரம்ப் செய்த குளறுபடிகளால் அமெரிக்கா தலை குனிந்து நிற்கிறது

உலக ஜனநாயகத்தின் பாதுகாவலர் தெய்வமாக முன்வைக்கும் அமெரிக்காவின் வரலாற்றில் கடந்த 6ம் திகதி ஒரு கரும் புள்ளியாகவே அடையாளப்படுத்தப்பட்டு விட்டது.

“அமெரிக்க ஜனநாயகத்தின் இருப்பிடம்” எனக் கருதப்படும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் கட்டிடத்திற்கு அருகே நடந்த போராட்டங்களால் அது நிகழ்ந்தது.

ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பலவந்தமாக கேபிடல் கட்டிடத்திற்குள் நுழைந்ததால் ஏற்பட்ட நிலையை தணிக்க பொலிஸ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

வாஷிங்டனில் 15 நாள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கு ஜோ பிடனின் தேர்தலின் முடிவை உறுதிப்படுத்தும் தேர்தல் வாஷிங்டனில் உள்ள கேபிடல் கட்டிடத்திற்குள் நடந்து வந்தமையால் ஜனாதிபதி டிரம்ப்பின் ஆதரவாளர்கள் ஒரு முற்றுகை போராட்டத்தை நடத்தினர்.

வெளிநாட்டு ஊடகங்கள் ஆயுதமேந்திய எதிர்ப்பாளர்கள் பலவந்தமாக கேபிடல் கட்டிடத்திற்குள் நுழைந்து கேபிடல் கட்டிடத்தைக் கட்டுப்படுத்த முயன்றதாக செய்தி வெளியிட்டது.

அவர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கியதும், நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

நிலமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் முயன்ற போது ஒரு பெண் உட்பட நான்கு எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர்.

கலவரம் தொடர்பாக ஐம்பத்திரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், அதிகாரத்தை அமைதியாக மாற்றவும் ஜனாதிபதி டிரம்ப் தயக்கம் காட்டியிருப்பதும் நாட்டின் அரசியல் ஸ்திரமின்மைக்கு பங்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் தனது தோல்வியை “பாரிய தேர்தல் மோசடி” என்று கூறி, அதற்கு எதிராக அணிதிரளுமாறு தனது ஆதரவாளர்களை அழைத்தார்.

தவறான அறிக்கைகளை வெளியிடுவதாகக் கூறி, அதிபர் டிரம்பின் கணக்குகளை தற்காலிகமாகத் முடக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நடவடிக்கை எடுத்துள்ளன.

ஜார்ஜியா, பென்சில்வேனியா, நெவாடா, மிச்சிகன் மற்றும் அரிசோனா மாநிலங்களில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றார்.

ஆர்ப்பாட்டங்கள் இருந்தபோதிலும், எதிர்ப்பாளர்கள் கேபிட்டலின் அறையிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட்ட பின்னர் பொலிசார் தலையிட்டு மீண்டும் அமர்வைத் தொடங்க வழி செய்தனர்.

கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் காங்கிரஸ் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர் எதிர்ப்பாளர்களின் நடத்தையை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கடுமையாக விமர்சித்தார்.

“இன்று அமெரிக்க வரலாற்றில் ஒரு இருண்ட நாள். நடந்த வன்முறையை நாங்கள் கண்டிக்கிறோம். உயிர் இழப்புக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம். நாங்கள் வெல்லவில்லை. வன்முறை ஒருபோதும் வெல்லாது. சுதந்திரம் மட்டுமே வெல்லும்” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், 2012 ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி பேசும் போது: “என் இதயத்தை உறைய வைக்கும் புகைப்படங்களை உலகம் முழுவதும் இருந்து பார்த்தேன். இப்படியான நடத்தை காரணமாக, வேதனையடைந்துள்ள வாக்காளர்களை கௌரவிப்பதற்கான ஒரே வழி அவர்களிடம் உண்மையைச் சொல்வதுதான். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிடன் தேர்தலில் வெற்றி பெற்றார், ஜனாதிபதி டிரம்ப் தோல்வியடைந்தார். இதுவே உண்மை. எனக்கு தோல்வி அடைந்த அனுபவம் இருந்தது, அது வேதனையானது என்று எனக்குத் தெரியும்.

விவாதத்திற்குப் பிறகு, அனைத்து ஆட்சேபனைகளையும் தள்ளுபடி செய்ய காங்கிரஸ் முடிவு செய்தது.

அதன்பிறகு, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் ஒரு எதிர்ப்பு மட்டுமல்ல, கிளர்ச்சியும் என்று அறிவித்தார்.

“இது ஒரு எதிர்ப்பு அல்ல. இது ஒரு கிளர்ச்சி. உலகம் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மற்ற அமெரிக்கர்களைப் போலவே நானும் வருத்தப்படுகிறேன், . ஜனநாயகத்தின் எதிர்பார்ப்புகள் மிகவும் இருண்ட நிலையை எட்டியுள்ளன.” என்றார் பிடன்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பிடன் ஜனவரி 20 ஆம் தேதி கேபிடல் கட்டிடத்தில் பதவியேற்பார்.

தற்போதைய சூழ்நிலையில், வாஷிங்டன் பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு விதித்து அடுத்த 15 நாட்களுக்கு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரை அவசரகால நிலை நகரத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஜனாதிபதி டிரம்ப் தனது பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு ஜனவரி 20 ஆம் தேதி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இருப்பினும், தேர்தல் முடிவுகளை நிராகரிப்பேன் என்றும் நீதிக்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் டிரம்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

– ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.