தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டி உள்ளது : வேலாயுதம் கணேஸ்வரன்

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாயவனூர் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. அவை எவற்றையும் தமிழ் அரசியல்வாதிகள் பார்ப்பதில்லை. அவர்கள் தமிழ் என்ற மாயையை மாத்திரம் காட்டி தமிழருக்கு உரிமை வேண்டும் என்று கடந்த 70 வருடங்களாக அதனையே கூறிக்கொண்டு வருகிறார்கள்.

நாங்கள் கடந்த 30 வருடங்களாக முப்படை வைத்து போராடினோம்.அதன் மூலம் கிடைக்காத ஒன்றை அவர்கள் திரும்பவும் ஐக்கிய நாடுகள் சர்வதேச நாடுகளின் மூலம் பெறப்போகின்றோம் என கூறுகிறார்கள். ஆனால் இந்த ஐக்கிய நாடுகள் சர்வதேச நாடுகள் எல்லாம் 2009 ஆம் ஆண்டு எமது மக்கள் கொத்து கொத்தாய் அழியும் போதெல்லாம் வரவில்லை.அவர்கள் வருவார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் மாயை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

– ஜனனி

Comments are closed.