இலங்கை அணி இங்கிலாந்து அணியினுடைய ஓட்ட எண்ணிக்கையை கடந்தது.

286 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி , திரிமான்னவின் சதம், குசல் பெரேராவின் அரைச்சதம் மத்தியூஸ் 51 , டிக்வெல்ல 23 ஆகியோரின் இணைப்பாட்டம் மூலமாக இப்போது இங்கிலாந்து அணியினுடைய ஓட்ட எண்ணிக்கையை கடந்தது.

இங்கிலாந்தை காட்டிலும் 8 ஓட்டங்களால் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது .

இந்த காலி மைதானத்தில் நான்காவது இன்னிங்சில் 150 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தாலும் இந்த போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பை இலங்கை அணி ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.