இந்த வருடத்தில் 13 மலேரியா நோயாளர்கள் அடையாளம்

இந்த வருடத்தில் இதுவரை 13 மலேரியா நோயாளர்கள் அடையாளரம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த 13 பேரில் 03 பேர் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டதாக அவ் இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட மூவரில், ஒருவர் தம்புள்ளை பெல்வெஹர தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்டதாக மலேரிய ஒழிப்பு இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த நபர் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அடையாளம் காணப்பட்ட ஏனைய இருவரும் தம்பதிவ யாத்திரை சென்று நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கலவானை மற்றும் மொனராகலை பகுதிகளை சேர்ந்தவர்கள்.

இலங்கையில் மலேரியா நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தரும் நபர்களே இந்நோயினால் கூடுதலாக பீடிக்கப்பட்டு வருவதாக தேசிய மலேரியா இயக்கத்தின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

Comments are closed.